கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர் அழிவு தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ள கருத்து.
கிளிநொச்சி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பயிர் அழிவு தொடர்பில் உரிய மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட மாவட்ட விவசாய குழு கூட்டத்தின் பின்னர் நேற்று(19.02.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பயிர் அழிவு தொடர்பில் விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய காப்புறுதி சபை உத்தியோகத்தர்களின் கருத்தும் பெறப்பட்டது.
இதற்கமைய, கடந்த பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட விளைச்சல் மற்றும் கிடைக்கப்பெற்ற விளைச்சல் தொடர்பில் தரவுகளை அறியத்தருவதாக விவசாயத் திணைக்களம் உறுதியளித்தது எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment