Header Ads

test

முகமாலையில் வியாபார நிலையம் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல்.

 முகமாலை வடக்கு A9 வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்று (19.02.2025) நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறிந்த கடையின் மீது 2020ஆம் ஆண்டில் கழிவு ஓயில் வீசப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டில் மூகமூடி அணிந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்களால் இரும்புக்கம்பி கொண்டு கடையின் சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களும் தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மூன்றாவது தடவையாக குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


No comments