பளையில் களைகட்டப்போகும் நர்த்தன சங்கமம் - 2025.
கிளிநொச்சி பளையில் சிறப்பான முறையில் தனது பணிகளை முன்னெடுத்துவரும் நடன ஆசிரியர் திருமதி. ஜிலானி சிந்துஜன் அவர்களின் "நாட்டியஷேஷ்ரா நடனாலயம்" பெருமையுடன் வழங்கவுள்ள "நர்த்தன சங்கமம்" 22.02.2025 அன்று கிளி/ பளை மத்திய கல்லூரியின் ஆருக்கிருத்திக் கலையரங்கில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், கெளத்துவம், வர்ணம், காவடிச்சிந்து, பதம், கீர்த்தனம் மற்றும் தில்லானா போன்றவையும் இடம்பெறவுள்ளன.
இளையவர்களின் திறன்களை வலுவூட்டும் வகையில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது தற்காலத்திற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளதுடன், இந் நிகழ்விற்கு நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமானவர்கள் பங்குகொள்ளுகின்றனர்.
Post a Comment