மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான வான்.
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் தொலைபேசி இணைப்பு கம்பத்தில் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்றைய தினம் (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து ரயில் நிலைய வீதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான், பண்டாரிக்குளம் அம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த தொலைபேசி இணைப்பு கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் வாகனம் மற்றும் தொலைபேசி இணைப்பு கம்பம் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது, வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயங்களும் இன்றி உயிரிதப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment