Header Ads

test

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறையால் ஒழுங்குபடுத்தப்பட்ட கபடி பயிற்சி முகாம்.

 முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்க்குட்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான கபடி பயிற்சி, தேசிய கபடி பயிற்றுனர்களினால் வழங்கப்பட்டது.

கடந்த 30.12.2024 அன்றைய தினம், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவு(பாண்டியன்குளம்) கபடி வீரர்களுக்கான கபடி பயிற்சி முகாம் ஒன்று, முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறையினரால்  ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மாந்தைகிழக்கு, வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் பாடசாலை மைதானத்தில் தேசிய கபடி பயிற்றுனர்களால், பயிற்சி வழங்கப்பட்டது.

குறித்த பயிற்சி நிகழ்வில் 50க்கும் அதிகமான வீரர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் வடமாகாண விளையாட்டு திணைக்கள தலைமைப்பீட விளையாட்டு உத்தியோகத்தர் சதானந்தன், புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் விளையாட்டு உத்தியோகத்தர் வரதன் கலந்து சிறப்பித்ததுடன், இவர்களுக்கான பயிற்சியினை தேசிய பயிற்றுனர் கீத்சிறி அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











No comments