Header Ads

test

பலகோடி ரூபாய்களை ஏப்பமிட்ட அரச அதிகாரி பணியிடை நீக்கம்.

 மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உதவி தேர்தல் ஆணையர் கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற, தேர்தல்களில் அரச பணத்தில் களவாடிய குற்றத்துக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளப்பதவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குறித்த அரச அதிகாரி சுமார் 4.5 கோடி ரூபாயை களவாடிய குற்றத்திலேயே இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இவர் வெளிநாடு தப்பிச் செல்ல முடியாத வகையில் இவரது அடையாள அட்டை உரிய திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவர் கடந்த காலங்களிலும் பல கோடி ரூபாய் சுருட்டிய போதும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், தற்போது அனுர அரசின் ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளில் ஒரு கட்டமாக இது அமைந்துள்ளது என்று அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது,

குறித்த பணத்தை எடுத்து கொண்டு வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார் என்றும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments