வவுனியா மாவட்ட செயலகத்தில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் உறுதியுரையுடன் ஆரம்பம்.
தேசிய ரீதியில் இவ்வாண்டு முதலாம் திகதி முதல் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திடம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கான உறுதியுரையினை எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன், பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்தலைவர்களும் ஆசியுரைகளும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கான உறுதியுரை அரச உத்தியோகத்தர்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment