Header Ads

test

மாமூலைப் பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்குபற்றிய ரவிகரன் எம்.பி.

முல்லைத்தீவு - மாமூலைப் பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தினார். 

மேலும் தெரியவருகையில்,

இதன்போது மாமூலைப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. 

தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த மக்கள் குறைகேள் சந்திப்பில், மாமூலை கிராமத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக்கொண்டுவரப்பட்டது. 

அந்தவகையில் மாமூலைக் கிராமத்தில் வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், உள்ளகவீதிகளைச் சீரமைத்தல், கிராம அபிவிருத்திச் சங்க கட்டடச் சீரமைப்பு, விளையாட்டு மைதான மதில் சுவர் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்களால் முன்வைக்கப்பட்டதுடன்,கிராமக்கள் சார்பாக குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது. 

இந் நிலையில் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிவிடுவிப்புத் தொடர்பிலும், கிராமத்திலுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பிலும் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. 












No comments