நாட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு.
மாத்தறை- வெலிகம, கப்பரதோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று(04.01.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 26 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த 03 பேர், கொண்ட அடையாளம் தெரியாத குழுவினர் வீதியில் பயணித்த 05 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனும் ஏனைய 3 பேர் தப்பியோடியதாகவும், சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment