Header Ads

test

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

2025ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2025) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

அந்தவகையில், வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

  இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 8.30 மணிக்கு  மாவட்ட பதில் அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

மேலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் உத்தியோகத்தர்கள்  நேரலை ஊடாக இணைந்திருந்தனர்.

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்கள்  அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை தணித்தல், டிஜிற்றல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருத்துக்களை உள்ளடக்கியதாக சிறப்புரை ஆற்றியிருந்ததுடன் இந்த வருடம் அனைவரது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவரவேண்டுமென புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ. நளாயினி, பிரதம கணக்காளர் சி. கஜேந்திரன், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.











No comments