Header Ads

test

அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை கைப்பற்றிய பொலிசார்.

 மேல் மாகாணத்தின் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும் 4.5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்களை வளான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வாகனங்கள் பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், இராணுவ ஜீப் போன்ற வாகனம் ஒன்று காணப்படுவதாகவும்,  அது வெளிநாடுகளில் உள்ள ஆயுதப்படையினரால் பயன்னடுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரத்மலானை தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சொகுசு ஜீப் வண்டிகளும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு ஒருங்கினைக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த வாகனங்கள் அரச நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


No comments