Header Ads

test

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

 புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதியில் நேற்று (06-01-2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாகக் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


No comments