Header Ads

test

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் கிறிஸ்மஸ் நிகழ்வு.

 வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் கிறிஸ்மஸ் நிகழ்வு சிறப்பான முறையில் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இடம்பெற்றது.

இலங்கை தேசிய சமாதான பேரவையின் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சர்வமத பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.விக்கினேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இக் கிறிஸ்மஸ் நிகழ்வில் கத்தோலிக்க, இந்து, பௌத்தம், இஸ்லாம் மதத் தலைவர்கள் கலந்து கொண்டதுடன், தமிழ், சிங்கள, கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களால் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இதன்போது கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்களும் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கபபட்டது. இதில் மதத்தலைவர்கள், மாணவர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.













No comments