Header Ads

test

பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதியில் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி திறந்து வைப்பு.

உலக வங்கி மற்றும் ஐரோப்பியன் யூனியன் நிதி மற்றும் சபைநிதி ஒதுக்கீட்டின்கீழ் பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தினூடாக 65.30 மில்லியன் ரூபா செலவில் பளை நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதி திறப்பு விழா நேற்று(2025.01.01) நடைபெற்றது.

 குறித்த நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர் த.தர்சினி அவர்களின் தலைமையில், பளை பொதுச்சந்தை வளாகத்தில் மு.ப 11.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்  இ.த.ஜெயசீலன், கிளிநொச்சி பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.சத்தியராகவன் ஆகியோர் அதிகளாக கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் குத்தகைதாரர்களுக்கு திறப்புக்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அலுவலர்கள், கடைகளினை குத்தகைக்குப் பெற்றுக்கொண்ட குத்தகைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.










No comments