கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.
புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக் கொடி ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
தொடர்ந்து, அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நேரலை உரை காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்கள் அனைவரும் "Clean Sri Lanka " திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்கள் உத்தியோகத்தர்களுக்கு" clean Sri Lanka" வேலைத்திட்டம் பற்றிய கருத்துக்களையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அத்துடன், இறுதியாக 2024 ஆம் ஆண்டிற்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட இலக்குகளை பூர்த்தி செய்து பிரதேச மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரைகள் வழங்கப்பட்டதுடன், கிராம அலுவலர்களுக்கான தினக்குறிப்பு பதிவேடுகளும் வழங்கப்பட்டன.
Post a Comment