Header Ads

test

வடக்கிலிருந்து பனைசார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கு நடவடிக்கை.

 வடக்கு மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனைசார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் பனை அபிபிருத்தி சபை எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாத சூழ்நிலையில் அதனை நான் பொறுப்பெடுத்த நிலையில் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகிறேன்.

2025ஆம் ஆண்டு வடக்கிலிருந்து 3500 மில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்த்து பனை சார் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுமார் 3000 மில்லியன் ரூபாய்க்கான கோரிக்கைக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் எமது பனை இயற்கை பாடத்திற்கான சிறந்த சந்தை வாய்ப்புகள் கிடைக்கும் நிலையில், ஏற்றுமதி மூலம் அதிக இலாபத்தை ஈட்ட முடியும்.

பனை வளம்சார் உற்பத்திகளுடன் 95 ஆயிரம் பேர் ஈடுபட்ட நிலையில், அவர்களின் தேவைப்பாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத காரணத்தினால் குறித்த உற்பத்தித் துறை தற்போது 5 ஆயிரம் பேர் வரை சுருக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எதிர்வரும் வருடம் பனை சார் உற்பத்தி பொருட்கள் மூலம்  இலங்கை மொத்த தேசிய வருமானத்துக்கு பங்களிப்பு செய்யும் வகையில் எமது திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 



No comments