முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறந்து வைப்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொலிஸ் நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறப்பு விழா நேறைய தினம் (27) இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக, வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் திரு.திலக்சி தனபால கலந்து சிறப்பித்ததுடன் மாநாட்டு மண்டபத்தின் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
விளையாட்டில் வெற்றி பெற்ற பொலிஸாருக்கு பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தார். அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் வன்னி , கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரிகள், பொலிசார் என பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment