Header Ads

test

நடைமுறைக்கு வரவுள்ள புதிய தொடருந்து பயணச்சீட்டு.

 தற்போது பயன்படுத்தப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக புதிய பயண அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

இதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகுவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போது பயன்பாட்டில் உள்ள தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக, முன்பணம் செலுத்திய தொடருந்து பயணச்சீட்டை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 


No comments