மனைவி வெளிநாட்டிற்குச் செல்ல தயாரான நிலையில் கணவர் விசமருந்தி மரணம்.
குருணாகல், தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம் தந்தையொருவர் உயிரை மாய்த்துள்ளார்.
தனது மனைவி வெளிநாட்டிற்கு செல்ல தயாரானதால் மனமுடைந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சானக மதுஷன் என்ற 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மாய்த்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு 7 மற்றும் 3 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல தயாராகியுள்ளார். இதற்கு குறித்த பெண்ணின் கணவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இந் நிலையில், விரக்தியடைந்த கணவர் விசமருந்தி உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்த இடத்தில் இருந்து ஐம்பது மீட்டர் தொலைவில் பூச்சிக்கொல்லி மருந்து போத்தலை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment