வன்னி பகுதி பாடசாலைகளின் வளப் பற்றாக்குறை தொடர்பில் பாராளுமன்றில் இடித்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்.
பாடசாலைகளுக்கான வளங்களைப் பகிரும்போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் வளங்களை சமமாகப் பகிருமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(17) சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையிற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பாடசாலைகளுக்கு வளங்கள் சமத்துவ அடிப்படையில் பகிரப்படவேண்டும். இன்னமும் வன்னிமாவட்டத்தின் பல பாடசாலைகளில் இலத்திரனியல் வளப்பட்ட வளநிரப்பல் போதுமான அளவில் இல்லை. வன்னியில் முல்லைவலயம் மற்றும், மன்னார் வலயங்களில் கணனி வள நிலையம் இல்லை.
பாடசாலைகளில் சுகாதாரப் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. அந்தவகையில் கல்விசாரா ஊழியர்கள், பாடசாலைப் பணியாளர், இரவுநேரக் காவலாளி இப்படியான தேவைகள் உள்ளன.
குறிப்பாக வன்னியில் போதுமான நிதியிடல் இல்லை. இன்றளவும் முல்லைத்தீவுக் கல்வி வலயத்தில் ஒரு கணனியுடன் இயங்கும் பாடசாலைகள் உள்ளன.
அதேவேளை, மாணவர்களிடையே விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையிலான முழுமையான வளங்கள் வழங்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment