Header Ads

test

மன்னார் மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு நடைபெற்ற உற்பத்தித்திறன் பயிற்சி நெறி.

 மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில்  மாவட்ட விதாதாப் பிரிவினரால் மன்னார் மாவட்டத்திலுள்ள  தொழில் முயற்சியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  "உற்பத்தித்திறன்"   தொடர்பான பயிற்சி நெறியானது 26 மற்றும் 27ம் திகழில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு,R.கிருஷ்ணராஜன் அவர்களும்,உற்பத்திதிறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு. R.றொபின் ஜெயரூபன், திருமதி. ஜுலி மரியா சோசை  அவர்களும்  கலந்து கொண்டு விரிவுரைகளையும்,செயல் முறைப்பயிற்சிகளையும் வழங்கியிருந்தார்கள்.

இப்பயிற்சி நெறியில் 31 தொழில் முயற்சியாளர்களும், 07 விதாதா உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.









No comments