Header Ads

test

போலி நாணய தாள்களுடன் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது.

5000 ரூபாய் மதிக்கத்தக்க 57 போலி நாணய தாள்களுடன் பாடசாலை மாணவர்கள் நால்வரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திகன பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவித்ததன் பிரகாரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு மாணவர்களும் திகன பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் போலியானது என கண்ட வர்த்தகர், இது தொடர்பில் தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் 15-16 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், தெரிந்த மாமா ஒருவர் பொருட்களை வாங்க அந்த நோட்டுகளை கொடுத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


No comments