யாழில் இடம்பெற்ற மாவட்ட பண்பாட்டு விழா.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா அரியாலை மகாமாரியம்மன் மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது.
இதன்போது கலை பண்பாட்டு நிகழ்வுகளுடன் விருந்தினர்கள், நிகழ்வு மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற யாழ் மாவட்ட செயலாளர் முதன்மை விருந்தினராகவும், வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், ஓய்வு நிலை அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலைஞர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் 'இளங்கலைஞர் விருது' மற்றும் 'யாழ் முத்து' விருது வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
Post a Comment