காலி சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் - இருவர் வைத்தியசாலையில் அனுமதி.
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
காலி மீட்டியாகொடை பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களில் இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த கைதிகள் இருவரும் சிகிச்சைக்காக பூஸா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
Post a Comment