Header Ads

test

ஹங்குரன்கெத்த கபரகல தோட்டத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து.

 ஹங்குரன்கெத்த கபரகல தோட்ட கீழ் பிரிவில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த தீ விபத்தானது நேற்றைய தினம்(22) இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேர் தற்காலிகமாக அங்குள்ள பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments