நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட கசப்பு கொலையாக மாறியது.
பாணந்துறை ஹொரேதுடுவ பகுதியில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், மார்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபர் மொரட்டுவை எகொடஉயன பகுதியை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பகுதியை விட்டு தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment