Header Ads

test

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள கையெழுத்துப் போராட்டம்.

 வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் ஒன்று இன்று (28) இடம்பெற்றுள்ளது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையம் முன்பாக இந்த போராட்டம் இடம் பெற்றது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக விசாரணைகள் ஏதும் இன்றி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியே இப் பாேராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மதத்தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.  


No comments