சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர்.
உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். நாம் ஒரு தேசிய இனம் ஆனால் தொன்றுதொட்டு சிறுபான்மையினம் என்ற பதத்திற்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டுள்ளோம்.
எமது எட்டு மாவட்டத்திலுமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எண்ணிக்கை 18,817பேர் ஆகும். அதுமட்டுமல்லாமல் 2009இல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது எமது மக்கள் மீது பாரிய இனவழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1,46,679 பேரை இனவழிப்பு செய்துள்ளது.
நாம் எமது உறவுகளை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கின்றோம். நாங்கள் இப்போதும் தொடர்ந்து எமது உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றோம்.
ஏனென்றால் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியவேண்டும் என்றும், சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்றும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment