Header Ads

test

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமனம்.

 இன்று (17) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் 10வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய சபாநாயகர் பதவிக்கான முன்மொழிவு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டதுடன், சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை உறுதிப்படுத்தினார்.

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு | Jagath Wickramaratne Elected As New Speaker

10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வல , கல்வித்தகுதி தொடர்பில் எழுந்த சர்ச்சையால் ராஜினாமா செய்ததையடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments