Header Ads

test

சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழப்பு.

 காலி, தடல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, தடல்லவில் இன்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


No comments