பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 2ஆம் திகதி முதல் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஜனவரி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment