Header Ads

test

அடிமையே உனக்காக - கவிஞர் பாரதி மைந்தன்.

போதையின் பிடியில்

பொழுதைக் கழிக்கும் 

இளைஞனே உன்னுடன் 

கொஞ்சம் பேசுகிறேன்

 

வறுமை உணராது 

தாயை மதிக்காது 

தந்தையை வெறுத்து 

உலகத்தை மறக்கும் 

உன்னுள் நானும் 

செய்கிறேன் பல 

வித்தைகள் நித்தம் 


எனக்கு அடிமையாகி 

திருடனாய் நீயும் 

மாறியே வாழ்கிறாய் 

ஊரே உன்னை 

மிருகமாய் எண்ணிட


யார் நீயென்றே 

அறியமல் நாளும் 

உன் தங்கையை

உடலின் பசிக்காய் 

இச்சைகள் தீர்க்கிறாய் 

முட்டாளாய் மாறி 


சிறையே அறியாத 

உன்னையும் சிறையில் 

அடைத்தே விடுகிறேன் 

என்னை நம்பியதால்

உணர்ந்தாயா நீயும் 


என்றன் மாய

வித்தைகளின் பிடியில் 

மாட்டியே தவிக்கிறாய் 

மூடனே நீயும்

பணத்தை கரியாக்கி 


என்ன சொல்ல 

உழைப்பு என்றே 

உன்னை அழிக்க 

என்னை உருவாக்கி

உன்னை அடிமையாக்கி 

எவனோ உழைக்க 

நீயோ அழிக்கிறாய் 

உன்னையே அறியாது 


வாயில்லாத நான் 

உன்னுள் சென்றே 

பல கதைகள் 

பேசுகிறேன் அறிவாயா 


சாதிக்க பிறந்தவன் 

வாழ்க்கையில் நீயும் 

வீழ்ந்தே கிடக்கிறாய் 

என்னால் நாளும் 


கண்ணீரைக் கொடுத்தே 

குடும்பத்தை அழித்து 

மரணத்தை பரிசாய் 

தந்திடும் என்னை

நம்பியே வாழும் 

மூடனே நீயும்


உன்னை எண்ணியே 

வாழும் உறவை 

நினைத்தே பார்த்தாயா 

என்னை நம்பியே 

அழிந்திடும் உன்னை 

பார்த்தே சிரிக்கிறேன் 


திருந்திட மாட்டாய்

இருந்தும் கூறுகிறேன் 

என்னை நம்பாதே 

உன் வாழ்க்கை 

அழகிய மலர் 

அழகாய் வாழ்ந்திடு 

என்னை நம்பாதே 

பாரதி மைந்தன்.


No comments