மூத்த ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வன் மீது இடம்பெற்ற தாக்குதல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வன் அவர்களை நேற்றைய தினம் (26) வானில் வந்தவர்கள் கடத்த முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
கிளிநொச்சி A- 9 வீதியில் பட்டப் பகலில் உடகவியலாளரை வானில் வந்தவர்கள் கடத்த முயற்சித்த போதிலும், குறித்த ஊடகவியலாளர் காட்டிய எதிர்ப்பு காரணமாக அவர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
இந் நிலையில், பாதிக்கப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
குறித்த உடகவியலாளர், சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இச் சம்பவத்திற்கும் சமூக விரோத கும்பலுக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
சமூக விரோத கும்பலின் பின்னணி என்ன, அவர்கள் யாருடைய ஆதரவோடு இவ்வாறு செயற்படுகின்றனர் என தீவிர விசாரணைகள் இடம்பெற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் பலரும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்னர்.
Post a Comment