Header Ads

test

இளம் குடும்பத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான துப்பாக்கிச் சூடு.

 குருணாகலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கணவன் மற்றும் மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

இந்த சம்பவம் வெல்லவ மரலுவாவ பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. படுகாயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 30 வயதான பெண் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் அந்தப் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த திருமணமான தம்பதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



No comments