Header Ads

test

ஆழியவளையில் இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல் கொள்ளை - தடுத்து நிறுத்தாத அரச அதிகாரிகள்.

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக பெருமளவான மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் (18.12.2024) தெரிவித்தனர்

ஆழியவளைப் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக பொலிசாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திய போதும், அவர்களால் குறித்த மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியவில்லை. 

நள்ளிரவு நேரம் காவல்களை அமைத்து JCB இயந்திரத்தின் மூலம் டிப்பர்களில் பாரிய மணல் கொள்ளையை, மணல் கடத்தல் காரர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாதைகளை அழித்து வீதிக்கு அருகில் வைத்தே பெருமளவான மணலை சூரையாடிச் செல்வதால் தற்பொழுது குறித்த பாதைகளிலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மணல் மேடுகளை அழிப்பதால் கடல் நீர் குடி மனைகளுக்குள் வரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும் மருதங்கேணி பொலிசாருக்கு அறிவித்தும் இதுவரை மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும், சம்மந்தப்பட்டவர்களை இதுவரை கைது செய்யவில்லை எனவும் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொலிசாருடன் இணைந்து தமது ஆழியவளை கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, தமது கிராமத்தை பாதுகாத்து தருமாறு கிராமவாசிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.














No comments