Header Ads

test

தமிழர் பகுதியில் கைத்துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது.

 மட்டக்களப்பு - வாகரை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதனை வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாகரை அம்மந்தன்வெளி பகுதியில் இருந்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் உள்நாட்டு தயாரிப்பான துப்பாக்கியை வைத்திருந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர், குறித்த நபரை வாகரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.   


No comments