ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சித்த இருவர் பொலிசாரால் கைது.
நேற்று முன்தினம் 26) கிளிநொச்சியில் ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை A9 வீதியில் வைத்து கடுமையாக தாக்கியதுடன், வாகனம் ஒன்றில் கடத்த முயற்சி செய்த சந்தேக நபர்கள் இருவரை கிளிநொச்சி பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Post a Comment