Header Ads

test

உயிருக்கு போராடிய வெளிநாட்டவரை காப்பாற்றிய கடற்படை சுழியோடி.

 தென்னிலங்கை கடலில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடிய வெளிநாட்டவரை கடற்படையின் சுழியோடிகள் காப்பாற்றியுள்ளனர்.

காலி, அஹூங்கல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த 64 வயதான போலாந்து பிரஜை ஒருவர் கடல் அலைகளில் சிக்கியுள்ளார்.

கடற்கரையில் நேற்றையதினம் நீராடிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட உயிர் பாதுகாப்பு சுழியோடி பிரிவினர், அவரை காப்பாற்றி முதலுதவி அளித்துள்ளனர்.

போலந்து பிரஜை மேலதிக சிகிக்சைகளுக்காக அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அவர் முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



No comments