முன்மாதிரியான பொலிஸ் நிலையம் என்ற அங்கிகாரத்தை பெற்றுள்ள ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச பொலிஸ் நிலையம் உற்பத்தி மேம்பாட்டுத் திறனின் (five S)கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
குறித்த அங்கீகாரத்துடன் நேற்றைய தினம் (27) பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவின் ஒரு அங்கமான பொலிஸ் நிலையங்களை உற்பத்தி மேம்பாட்டுத் திறனின் கீழ்(Five s)கொண்டுவரும் செயற்பாடு நாடுபூராகவும் இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில், அதன் ஒரு அங்கமாக வடமாகாணத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தினை வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சி.ஏ.தனபால திறந்து வைத்து பார்வையிட்டதுடன், கலந்து கொண்ட அதிதிகளால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் இறுதியில் மரநடுகை இடம்பெற்றிருந்தது.
Post a Comment