ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு உதவ தயாராகவுள்ள அமெரிக்கா.
நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனல்ட் லூ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை நேற்று சந்தித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காக நிதி, தொழிநுட்ப ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியல், பொருளாதாரம், சமூக காரணிகள் தொடர்பான முன்னுரிமையை அறிந்து புதிய அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டங்களுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
Post a Comment