யாழ் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட சைகை மொழி டிப்ளோமா பாடநெறி.
சைகை மொழி டிப்ளோமாப் பாட நெறியின் ஆரம்ப நிகழ்வானது உதவி மாவட்டச் செயலாளர் செல்வி.உ.தர்சினி அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (27.12.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இப் பயிற்சி நெறியினை ஆரம்பித்து உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சைகை மொழியின் தேவைப்பாடுகள் உணரப்பட்டதனால் பாராளுமன்ற அமர்வுகளிலும் ஏனைய நிகழ்வுகளிலும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான சமூக மயமாக்கல் செயற்பாடு அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்ட அரசாங்க அதிபர் அவர்கள் இக் கற்கைநெறி யினை பயிலும் உத்தியோகத்தர்கள் தங்கள் சமூகத்திற்கு நன்மை பகிர்க்கும் வகையில் பூரணமாக கற்று தேர்ச்சி பெற வேண்டும் எனத் தெரிவித்து வாழ்த்தினார்.
இவ் ஆரம்ப நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உத்தியோகத்தர் திருமதி எல். எம். றிட்மா நிசாந்தினி லன்சகார அவர்கள் நிகழ்நிலை தொழில்நுட்பம் (Zoom) ஊடாக கலந்து கொண்டார்.
இப் பயிற்சியானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் FAIRMED நிறுவனத்தின் அனுசரணையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 20 உத்தியோகத்தர்களுக்கான ஒரு வருட டிப்ளோமா பயிற்சி நெறி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆரம்ப நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு. சிவ. அக்ஷயன், மாகாணப் பணிப்பாளர் திரு. ந. உமாநாத், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு. ந. ரதிக்குமார், FAIRMED நிறுவனத்தின் செயற்றிட்டத் தலைவர் திருமதி பிரியரஜனி ஞானதரன், வளவாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்குபற்றினார்கள்.
Post a Comment