Header Ads

test

வவுனியாவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை.

 வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பல காலமாக சூட்சுமமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டது.

நேற்று (21) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சேமமடு பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்திருந்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து, 150,000 மில்லிலீற்றர் கோடா மற்றும் 150,000 மில்லிலீற்றர் வடி ஆகியன மீட்கப்பட்டதுடன், ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபான உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை நேற்று (21) வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



No comments