Header Ads

test

தமிழர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள மாணவியின் மரணம்.

 மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த ,  உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்

இறப்பிற்கான காரணங்கள் இதுவரையில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாணவியின் இழப்பு அப் பகுதி மக்களிடையே  பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


No comments