Header Ads

test

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி மோசடி தொடர்பில் சற்று முன்னர் கைது.

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன்  நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிஸாரால் இன்றைய தினம் (20) கைது  செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

அவரது பிரத்தியேக செயலாளரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காசோலை நிதி மோசடி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் பிரத்தியேக செயலாளரை நேற்று(19) மாலை மாவட்ட நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments