வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக நபர் ஒருவர் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு.
ஹோமாகம, பனாகொட, பெலேதகொட, ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வர்த்தகர் என தெரிவிக்கப்படும் ஒருவரின் வீட்டின் மீது இன்று (18) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்களை பயன்படுத்தும் திறன் கொண்ட பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், இரண்டு தோட்டாக்கள் மற்றும் ஒரு பயன்படுத்தாத தோட்டாவும் வீட்டின் முன் வீதியில் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் வர்த்தகரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர் மேலும் பல போதைப்பொருள் வர்த்தகர்களிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாக சந்தேகிப்பதாக மீகொட பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த நுகேகொட பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment