சென்மேரிஸ் உள்ளூர் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தை தன்வசமாக்கிய யங் பைட்டர்ஸ் அணி.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியான Kspl season 3 உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று 22.12.2024 ஞாயிற்று கிழமை இடம்பெற்றது
சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் தலைமையில் மாலை 3.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் இறுதி போட்டி ஆரம்பமானது
இறுதிப் போட்டியில் யங் பயிட்டர்ஸ் அணியை எதிர்த்து பயிட்டர் கிங்ஸ் அணி மோதியது. விறு விறுப்பாக இடம்பெற்ற போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் யங் பயிட்டர்ஸ் அணி வெற்றி பெற்று Kspl season 3 இன் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றது.
முதலாம்,இரண்டாம் அணிகளுக்கு வெற்றிக் கேடயத்துடன் பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த இறுதி போட்டியில், கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்கு தந்தை, கட்டைக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர், கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர், சென்மேரிஸ் நாடக மன்ற தலைவர், முள்ளியான் உப அஞ்சல் அலுவலக அதிகாரி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் நூற்றுக் கணக்கான பொது மக்களும் இறுதிப் போட்டியைக் கண்டுகழித்தனர்.
Post a Comment