Header Ads

test

குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த அறிவிப்பிற்கு மறுப்பு தெரிவித்த மஹிந்தவின் மகன்.

 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இருவரும் அங்கு வர முடியாது என நேற்றையதினம் சட்டத்தரணிகள் மூலம் தெரிவித்தனர்.

யோஷித ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் நெவல் வன்னியாராச்சி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமோசடி சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை கையகப்படுத்தியமை தொடர்பான விசாரணை தொடர்பில் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.


No comments