Header Ads

test

வடமாகாண பொலிஸ் நிலையங்களுக்கு இந்திய கடனுதவியில் புதிய வாகனங்கள்.

வடக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது. 

இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துக்குத் தேவையான வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியக் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அதன் பிரகாரம், பொலிஸ் திணைக்களத்துக்குப் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கென  இலங்கை ரூபாய் மதிப்பில் 300 மில்லியன் ரூபா நிதியை இந்தியா கடனுதவியாக வழங்கவுள்ளது. 

இது தொடர்பில் இந்திய-இலங்கை தரப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


No comments