Header Ads

test

அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளிவந்த தகவல்.

 அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு 2025ஆம் ஆண்டில் நிச்சயமாக வழங்கப்படும் என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜயந்த கூறியுள்ளார்.

பொருளாதார கஷ்டங்களைத் தணிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இன்று(24.12.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் விரும்பினால், பொருளாதாரம் இப்போது சரிந்துவிட்டது என்று சொல்லியிருக்கலாம். அல்லது இன்னும் கொஞ்சம் பொறுங்கள், உங்கள் இடுப்புப்பட்டிகளை இறுக்கிக் கொள்ளுங்கள்.

2026இல் அதைச் செய்வோம் என்றும் வாதிடலாம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை செய்யாது. அத்துடன், மக்களின் கஷ்டங்களை அரசாங்கம் அறிந்திருக்கிறது. எனவே, சம்பள உயர்வை நிச்சயமாக எதிர்பார்க்கலாம் என்று அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார். 


No comments