அரச ஊழியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.
அரச ஊழியர்களுக்கான பண்டிகைக்கால கொடுப்பனவினை அதிகரிக்குமாறு அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
10,000 ரூபாவாக வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார கோரிக்கையை விடுத்துள்ளார்.
சமகால வாழ்க்கை செலவுக்கு ஏற்ப 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணம் போதுமானதாக இல்லை எனவும் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரச அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என, அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment